லியோ பட டிக்கெட்டுக்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை

விஜய்
விஜய்

லியோ படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை பாயும் என தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள, லியோ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், பல இடங்களில் டிக்கெட் விலைகள் மிகவும் அதிகரித்து விற்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சில இடங்களில் போலி டிக்கெட்டுகளும் விற்பனையாவதாக தகவல் வெளியாகியிருந்தது.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், லியோ படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றால், கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போதும் அதிக விலைக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கும் விவகாரம், தலை தூக்குவதாகவும், அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in