ஜெகன் காலில் விழுந்து ஆசிபெற்ற அமைச்சர் ரோஜா!

ஜெகன் காலில் விழுந்து ஆசிபெற்ற அமைச்சர் ரோஜா!

அமராவதியில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில் நடிகை ரோஜா உள்பட 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது இரண்டரை ஆண்டுகளில் அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.

அதன்படி கடந்த வாரம் அமைச்சரவையில் இருந்த 24 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதங்களை ஜெகன்மோகன் ரெட்டியிடம் வழங்கினர். அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பில் காலமானதால் 25 அமைச்சர்களின் பதவியிடங்கள் காலியானது.

இந்நிலையில் பழைய அமைச்சர்கள் ஆதி மூலபு சுரேஷ், பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, நாராயணசாமி, பி. சத்யநாராயணா, ஜெயராம், அம்பாட்டி ராம்பாபு, ராஜேந்திரநாத் ரெட்டி, விஸ்வரூப், அப்பலராஜு, வேணுகோபால கிருஷ்ணா, அம்ஜத் பாஷா, டெனிட்டி வனிதா ஆகிய 11 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய அமைச்சர்களில் நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா, குடிவாடா அமர்நாத், புடிமுட்யாலா நாயுடு, தாடிசெட்டி ராஜா, ராஜண்ணா டோரா பீடிகா, தர்மான பிரசாத் ராவ், ஜோகி ரமேஷ், அம்பத்தி ராம்பாபு, மெருகு நாகார்ஜுனா, விட்டாலா ரஜினி, கொட்டு சத்யநாராயணா, குருமுரி வெங்கட நாகேஸ்வர ராவ், காகனி கோவர்த்தன ரெட்டி மற்றும் உஷா ஸ்ரீ சரண் ஆகிய 14 பேர் அமைச்சர்களாகினர். அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவிப் பிரமாணம் முடிந்தவுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காலில் விழுந்து ரோஜா ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in