ஒரே வீட்டுக்குள் சென்று வாக்குச் சேகரித்த அமைச்சர் பொன்முடி- செல்லூர் ராஜு: ஈரோட்டில் வெடித்த சிரிப்பலை!

அமைச்சர் பொன்முடிக்கு வணக்கம் செலுத்தும் செல்லூர் ராஜு
அமைச்சர் பொன்முடிக்கு வணக்கம் செலுத்தும் செல்லூர் ராஜு ஒரே நேரத்தில் வீட்டிற்குள் சென்று வாக்குசேகரித்த அமைச்சர் பொன்முடி- செல்லூர் ராஜு ஈரோட்டில் நடந்த சிரிப்பலை

ஈரோடு கிழக்குத் தொகுதியில் உள்ள வீட்டிற்குள் அமைச்சர் பொன்முடி- செல்லூர் ராஜுயும் ஒரே நேரத்தில் சென்று வாக்குசேகரித்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்கு சேகரிக்கும் செல்லூர் ராஜு. அருகில் அமைச்சர் பொன்முடி
வாக்கு சேகரிக்கும் செல்லூர் ராஜு. அருகில் அமைச்சர் பொன்முடி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடை பெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் நாளை தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிக்கும் அமைச்சர் பொன்முடி. அருகில் செல்லூர் ராஜு
வாக்கு சேகரிக்கும் அமைச்சர் பொன்முடி. அருகில் செல்லூர் ராஜு

மேலும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கள்ளுக்கடைமேடு கல்யாண சுந்தரம் வீதியில் அமைச்சர் பொன்முடியும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவும் ஒரே வீட்டிற்குள் சென்று வாக்குகளை சேகரித்தனர். அப்போது செல்லூர் ராஜுயும், பொன்முடியும் ஒருவருக்கொருவர் கலகலப்புடன் பேசி சிரித்துக்கொண்டனர். மேலும் அமைச்சர் பொன்முடி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதைப்போல் செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதிமுகவினரும் திமுகவினரும் சிரித்துக் கொண்டு கலகலப்புடன் காணப்பட்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in