ஹேக்கர்களால் முடக்கப்பட்ட அமைச்சர் நேருவின் ட்விட்டர் பக்கம்: நாசா பற்றிய பதிவுகள் வெளியீடு

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட அமைச்சர் நேருவின் ட்விட்டர் பக்கம்: நாசா பற்றிய பதிவுகள் வெளியீடு

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கே. என். நேரு. இவரது ட்விட்டர் பக்கத்தை 2 லட்சத்து 4 ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில், அமைச்சர் கே.என். நேருவின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அவரது பக்கத்தில் அமெரிக்க விண்வெளி மையமான நாசா பற்றிய பதிவுகள் பகிரப்பட்டுள்ளன.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் அண்மையில் ஹேக்கர்களால் முடக்கம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்த ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டு மீண்டும் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் கே .என். நேருவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in