எம்ஜிஆர் ஆட்சியில் திமுக என்றாலே காவல் நிலையத்தில் தனி மதிப்பு இருக்கும்: அமைச்சர் நேருவின் பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி

எம்ஜிஆர் ஆட்சியில் திமுக என்றாலே காவல் நிலையத்தில் தனி மதிப்பு இருக்கும்:  அமைச்சர் நேருவின் பேச்சால் திமுகவினர் அதிர்ச்சி

திருச்சியில் தனியார் ஐஏஎஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நேரு இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் நேரு. ”செக்யூரிட்டியாக இருந்து என்னை அழைத்துக் கொண்டு போனவர் இன்றைக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று இங்கே வந்திருக்கிறார். அவருக்கு இருக்கும் திறமை என்னவென்றால், என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவர்.

அவர் நினைத்தால் ஒருவரைக் குற்றவாளியாக ஆக்க முடியும். குற்றவாளியை நிரபராதியாகவும் மாற்ற முடியும். அவர் எங்களோடு வளர்ந்தவர் என்பதால் நான் அதற்கு மேல் அதைச் சொல்ல விரும்பவில்லை.

நாங்கள் பார்த்த காவல்துறை என்பது வேறு. இப்போது இருக்கும் காவல்துறை என்பது வேறு. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் திமுக என்றாலே காவல் நிலையத்தில் தனி மதிப்பு இருக்கும். அது அந்த காலம். இன்றைக்கு இருக்கும் காவல்துறை அரசு என்ன சொல்கிறதோ, சரியோ தவறோ அதைச் செய்கின்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. மேடையில் பேசும் என் மீது 11 கொலை முயற்சி வழக்குகள் இருக்கின்றன. மோசடி வழக்கு, நில அபகரிப்பு வழக்கு, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குகளை காவல்துறைதான் போட்டது.

அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் போது அதிகாரிகள் அதைச் செயல்படுத்துகிறார்கள். நான் ஒன்றைச் செய்யச் சொல்லும் போது அது சட்டப்படி வராது எனச் சொன்ன அதிகாரிகள் எங்களுக்குத் தெரியும். நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா என நாங்கள் அப்போது முறைப்போம். இப்போது எங்களுக்கு அனுபவம் வந்திருக்கிறது. அவர்களைக் காப்பாற்றிக் கொண்டால்தான் அவர்களால் இருக்க முடியும் என்ற உணர்வுக்கு வந்துவிட்டோம் ” என்றார். இந்த பேச்சு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in