திமுக நிர்வாகி மீது கல்லெறிந்த அமைச்சர் நாசர்: வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி

கட்சி நிர்வாகி மீது கல் வீசும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர்.
கட்சி நிர்வாகி மீது கல் வீசும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர்.

பால்வளத்துறை அமைச்சர் நாசர், கட்சி நிர்வாகி மீது கல் வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில் நாளை(ஜன.25) மொழிப்போர் தியாகிகளுக்கான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இதற்காக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் ஐசிஎம்ஆர் அருகே உள்ள மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவர் அமர்வதற்கு இருக்கை எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். ஆனால், கட்சி நிர்வாகி இருக்கையை மெதுவாகவும், ஒரு இருக்கை மட்டும் எடுத்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கட்சி நிர்வாகி மீது கல் வீசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in