அடுக்கடுக்கான புகார்களால் ஆவடி நாசர் மகன் பதவி பறிப்பு: அமைச்சரின் கட்சி பதவி தப்புமா?

அமைச்சர் நாசர் மகன் அசீம் ராஜா
அமைச்சர் நாசர் மகன் அசீம் ராஜாஅடுக்கடுக்கான புகார்களால் ஆவடி நாசர் மகன் பதவி பறிப்பு: அமைச்சரின் கட்சி பதவி தப்புமா?

குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ஆவடி நாசரின் மகன் அசீம் ராஜா வகித்து வந்த மாநகர செயலாளர் பதவியை திமுக தலைமை அதிரடியாக பறித்துள்ளது. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் அமைச்சரின் மாவட்டச் செயலாளர் பதவித் தப்புமா என்ற கேள்வியும் திருவள்ளூர் திமுகவினரிடையே எழுந்துள்ளது.

அப்பா அமைச்சர்,மாவட்டச் செயலாளர், மகன் ஆவடி நகராட்சி பணி நியமனக்குழுத் தலைவர், மாநகர செயலாளர் என ஒரே குடும்பத்தில் அனைத்து பதவிகளும் குவிந்து கிடப்பது திருவள்ளூர் மாவட்டத் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு மகன் அசீம் ராஜாவை மாநகராட்சி பணி நியமனக்குழு தலைவராக ஆக்கிவிட்டார் அமைச்சர் நாசர். அசீம் ராஜா கை காட்டும் நபருக்குத்தான் மாநகராட்சி டெண்டர் என்ற நிலையை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கட்சியினருக்குக் கூட டெண்டர் கொடுப்பதில்லை. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அலெக்சாண்டரின் உறவினருக்கு டெண்டர் கொடுத்துள்ளார் என சர்ச்சை நாயகனாக வளம் வந்துள்ளதாக திருவள்ளூர் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

டெண்டர் எடுப்பதில் தான் இந்த நிலை என்றால் கட்சியில் பணத்தை வாங்கிக் கொண்டு பொறுப்புப் போட்டுள்ளார் அசீம் ராஜா. ஆவினில் வேலை வாங்கித்தருவதாக மோசடிச் செய்துள்ளதாகவும் அசீம்ராஜா மீது அடுக்கடுக்கான புகார்கள் வரிசைக்கட்டி வந்துள்ளது.

இந்த நிலையில் தான் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் நாசருக்கு எதிரான எதிரணியினர் மொழிப்போர் தியாகிகள் நினைவுப் பொதுக்கூட்டத்திற்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஆதாரத்துடன் கோப்புகளை ஒப்படைத்துள்ளனர்.

புகார் குறித்து விசாரித்த திமுக தலைமை, அதிரடியாக அசீம் ராஜாவை நீக்கி விட்டு சன்.பிரகாஷ் என்பவரை நியமனம் செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகன் நீக்கப்பட்டுவிட்டார். அடுத்தது அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அமைச்சரின் மாவட்டச் செயலாளர் பதவித் தப்புமா என்ற கேள்வி திமுகவினரிடையே எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in