`ஒரு ஏட்டுக்கு இருக்கும் காமன் சென்ஸ் கூட அண்ணாமலைக்கு இல்லை'- அமைச்சர் நாசர் காட்டம்

`ஒரு ஏட்டுக்கு இருக்கும் காமன் சென்ஸ் கூட அண்ணாமலைக்கு இல்லை'- அமைச்சர் நாசர் காட்டம்

"ஒரு ஏட்டுக்கு இருக்கும் காமன்சென்ஸ்கூட ஐபிஎஸ் படித்த அண்ணாமலைக்கு இல்லை" என அமைச்சர் சா.மு.நாசர் காட்டடாக கூறினார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ஆவின் நிறுவனத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுனங்களில் பால் உற்பத்தி செய்வது, உற்பத்தி பொருட்களை அதிகரிப்பது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில், சீரழிந்து கிடக்கும் ஆவின் நிறுவனத்தை நிலை நிறுத்தி, அதனை மேலும் வளம் பெற செய்ய வேண்டும் என்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று உதகை ஆவின் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஆவின் நிறுவனம் வியாபார நோக்கமின்றி, கொள்முதல் செய்யப்படும் பால், அப்படியே பதப்படுத்தப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. சுவையூட்டுவதற்காக எந்த ஒரு ரசாயனமும் கலப்படம் செய்யப்படுவதில்லை. சேவை அடிப்படையிலேயே இந்நிறுவனம் இயங்கி வருகிறது. 152 உப பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அனைத்து பொருட்களின் விலையும் குறைந்த விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், பல்வேறு துரித நடவடிக்கையால் தற்போது நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் 26 லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தமிழக முதல்வர் ஆவின் பால் விலையில் ரூ.3 குறைக்கப்பட்ட நிலையில், நாள் ஒன்றுக்கு 29 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கிழக்கத்திய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் தற்போது ஆவின் பால் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் ஆவின் நிறுவனம் நவீனமயமாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

ஹெல்த் மிக்ஸில் முறைகேடு நடந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளாரே? அதுப்பற்றி உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் நாசர், அதில் எந்த முறைகேடும் இல்லை. ஒரு ஏட்டுக்கு இருக்கும் காமன்சென்ஸ்கூட ஐபிஎஸ் பிடித்த அண்ணாமலைக்கு இல்லை. அவர் எப்படி காவல்துறை அதிகாரியாக பணியாற்றினார் என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது" என்றார் காட்டமாக.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in