அமைச்சர் நாசர் ரவுடி போல் கல்வீசியுள்ளார்: ஓபிஎஸ் கண்டனம்

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்’அமைச்சர் நாசர் ரவுடி போல் கல்வீசியுள்ளார் ’ - ஓபிஎஸ் விமர்சனம்

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவர் மீது கல்வீசி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் நாசரின் செயல் வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது என முன்னாள் முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

கட்சி நிர்வாகி மீது கல் வீசும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர்.
கட்சி நிர்வாகி மீது கல் வீசும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே சட்டம்-ஒழுங்கைச் சீரழிப்பது என்பது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. இந்தச் செயலை செய்துள்ள பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு அதிமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் என்பதையும் மறந்து ரவுடி போல கல் வீச்சில் ஈடுபட்டுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி செயல்படுவேன் என பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர் இப்படி செயல்படுவது அதனை மீறும் செயல். திமுகவினரின் செயல்பாடுகள் மூலம் சட்ட ஒழுங்கு எப்படி உள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைச்சர் நாசரை கண்டிக்க வேண்டும். ஜெயலலிதா அமைச்சரவையில் இப்படி ஒரு அமைச்சர் செயல்பட்டிருந்தால் அடுத்த நாளே அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கும்.

குற்றங்களை ஆராய்ந்து முதலமைச்சர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்’’ என அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in