`குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்': அண்ணாமலைக்கு சவால் விடுத்த அமைச்சர் மூர்த்தி!

`குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்': அண்ணாமலைக்கு சவால் விடுத்த அமைச்சர் மூர்த்தி!

பணம் பெற்றுக்கொண்டு சார் பதிவாளரை ஒரே நாளில் பணியிட மாறுதல் செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, ``என் மீது சுமத்திய குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்'' என்று கூறியுள்ளார்.

மதுரையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மதுரையில் உள்ள ஒரு சார்பதிவாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஒரே நாளில் பணியிட மாறுதல் செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி, "அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார் பதிவாளர் திண்டுக்கல்லில் 25 நாட்கள் பணியாற்றிய பிறகே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தேவைப்பட்டால் எந்த அதிகாரியையும் எப்போது வேண்டுமானாலும் பணியிடமாறுதல் செய்யும் உரிமையும், அதனை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு. என் மீது சுமத்திய குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் என்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வாரா?" என்று சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் பத்திரப்பதிவு துறையின் நிர்வாகம் மிக சிறப்பாக தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலி பத்திரங்களை பதிவாளர்கள் ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவை 7 மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார் குயடிரசுத் தலைவர். தமிழக அரசு கொண்டு வந்த அந்த முன்மாதிரி சட்ட திருத்தத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in