எப்படி இருக்கிறது செந்தில்பாலாஜியின் உடல் நிலை?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

``அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் என்ன மாதிரியான நோய் பாதிப்புகள் இருக்கிறது, அதற்கு என்ன மாதிரியான மருத்துவ சிகிச்சை என்பதெல்லாம் அறிவிக்கப்பட இருக்கிறது'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி, தீராத தலைவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருவதால் அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பித்தப்பையில் கற்கள் இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். இதனால் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்தே அவர் மருத்துவமனையில் இருக்கலாமா? அல்லது சிறைக்கு அழைத்து செல்லலாமா என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’செந்தில் பாலாஜிக்கு பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஏற்கெனவே ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டிருந்தது. அதில், தூக்கமின்மை, அதாவது ஆபரேஷனுக்கு அப்புறமாக ஏற்படுகிற சிறிய அளவிலான பாதிப்புகள் சம்பந்தமாக பார்ப்பதற்கு நேற்று ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

எங்கே ஆபரேஷன் செய்தார்களோ அங்கே பரிசோதனைகள் தொடர்வதற்காக வந்திருக்கிறார். பரிசோதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் என்ன மாதிரியான நோய் பாதிப்புகள் இருக்கிறது. அதற்கு என்ன மாதிரியான மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட இருக்கிறது என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்’’ என கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in