
நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருந்து வருபவர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். கடந்த மாதம் முதல் பெய்து வந்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள அலுவலகத்தில் இரவு, பகல் பாராமல் அவர் பணியாற்றி வந்தார். மேலும், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மீட்பு பணிகளை துரிதமாக செயல்படவைத்தார்.
இந்த நிலையில், மைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.