
திருச்சியில் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயம் நிலம் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது தொடரப்பட்ட நில அபகரிப்பு வழக்கினை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னை அண்ணா அறிவாலயம் போன்று திருச்சியில் 2008ம் ஆண்டு கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டது. அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியால் கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயத்தை கருணாநிதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ள இடம் தனக்கு சொந்தமானது எனவும், அமைச்சர் கே.என்.நேரு இந்த நிலத்தை அபகரித்து கலைஞர் அறிவாலயம் கட்டியுள்ளதாகவும் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த அமைச்சர் கே.என்.நேரு மீதான இந்த நில அபகரிப்பு வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நில அபகரிப்பு வழக்கினை பதிவு செய்த சீனிவாசன் சமரச மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து அமைச்சர் நேரு மீதான வழக்கினை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.