மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் அனுமதி!

மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் அனுமதி!

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி, கடந்த மாதம் மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டி, அமைச்சரவை கூட்டம், மாவட்டத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார் அமைச்சர் பெரியசாமி.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வத்தலகுண்டில், அவரது உறவினர் மரணமடைந்ததை தொடர்ந்து துக்க நிகழ்வில் அமைச்சர் பங்கேற்றார். இதனால் ஓய்வில்லாமல் இருந்த அமைச்சர் பெரியசாமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் அதிகமாகவே மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் பெரியசாமி அனுமதிக்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in