லண்டனில் கோட் சூட்டுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி: வைரலாகும் புகைப்படங்கள்

லண்டனில் கோட் சூட்டுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி: வைரலாகும் புகைப்படங்கள்

லண்டனில் நிறுவப்பட்டுள்ள கர்னல் பென்னி குக் சிலை திறப்பு விழாவுக்கு சென்றுள்ள தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கோட் சூட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயதிற்கான பாசன வசதியைப் பூர்த்தி செய்ய முல்லைப் பெரியாறு அணையை ஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் கர்னல் ஜான் பென்னி குக் கட்டினார். இதன் காரணமாக தென் மாவட்ட மக்களால் இவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவரை கௌரவப்படுத்தும் விதமாக ஆளும் திமுக சார்பில், லண்டனில் பென்னி குக் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா செப். 10-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் கோட் சூட் என மிடுக்கான ஆடை அணிந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in