`மத்திய அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டால் எங்களுக்கு அச்சமில்லை'- சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சர் பெரியசாமி
அமைச்சர் பெரியசாமி

"இலவசங்களை நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தால், மக்களுக்கான இலவச அரிசி திட்டம் நிறுத்தப்படும் என்று எங்களுக்கு அச்சமில்லை" என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சொந்த ஊரான திண்டுக்கல் செல்வதற்காக இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர், இலவசங்களை நிறுத்த வேண்டும் என்ற அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்தால், மக்களுக்கான இலவச அரிசி திட்டம் நிறுத்தப்படும் என்று எங்களுக்கு அச்சமில்லை. தற்போது, பல்வேறு நெருக்கடிகளை சமாளித்து, தமிழகத்தில் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். பத்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களை எல்லாம் தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம்" என்றார்.

மேலும், "மாணவிகளுக்கு இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் ரூ. 1000 வழங்க உள்ளோம். டெல்லியில் நடைமுறையில் உள்ள உயர்தர கல்வித் திட்டங்களை, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏழைகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக தமிழக அரசு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இத்திட்டத்தை ஆரம்பிக்கிறோம். இது மாநகராட்சிப் பள்ளியில் கொண்டு வருவது மிகப்பெரிய விஷயம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in