ரேஷன் கடைகளில் கூகுள்பே கொண்டு வருவதில் பாதுகாப்பு சிக்கலா?: என்ன சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

அமைச்சர் பெரியசாமி
அமைச்சர் பெரியசாமி

வெற்றிலை பாக்கு கடையில் கூட ஜிபே, பேடிஎம் உள்ளது. இதில், எந்த பிரச்சினையும் வராது என்ற நம்பிக்கை உள்ளது என்று மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "பள்ளி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் மருத்துவக் கல்லூரி, பொறியில் கல்லூரி மாணவிகளுக்கான புரட்சிகாரமான திட்டம். இதனை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்" என்றார்.

தொடர்ந்து, ரேஷன் கடைகளில் கூகுள்பே கொண்டு வருவதில் பாதுகாப்பு சிக்கல் உள்ளதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "சாதாரண வெத்தலைப் பாக்கு கடையில் கூட ஜிபே, பேடிஎம் உள்ளது. கடலை மிட்டாய் போன்ற சின்ன சின்னப் பொருள் வாங்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடையில் இதனைப் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்தலாம். இது கட்டாயமில்லை. இதில் எந்த பிரச்சினையும் வராது என்ற நம்பிக்கை உள்ளது" என்று பதிலளித்தார்.

மேலும், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லம் பொலிவின்றி காணப்படுகிறது என்ற கேள்விக்கு, "எல்லா நினைவு சின்னங்களும் முழுமையாக பாதுகாக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவுச் சின்னம் கலைஞர் ஆட்சி காலம் முதல் தற்போது, ஸ்டாலின் ஆட்சி வரை முறையாக பராமரிக்கப்படுகிறது" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in