அக்காவும் தம்பியும் ஆன்மிக வழிக்கு வந்துவிட்டார்களா?

கலசம் தூக்கிவரும் கீதாஜீவன்...
கலசம் தூக்கிவரும் கீதாஜீவன்...

‘விநாயகர் சதுர்த்திக்குகூட முதல்வர் வாழ்த்துச் சொல்வதில்லை. ஆனாலும் முதல்வருக்கு நாங்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் சொல்கிறோம்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றுக்கூட ஸ்டாலினை கோதாவுக்கு இழுத்திருந்தார். ஆனால், “நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரானவர்கள் இல்லை” என்று சொல்லும் ஸ்டாலின், கோயில் விழாக்களில் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை. இந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவனும் அவரது சகோவும் தூத்துக்குடி மேயருமான ஜெகனும் கோயில் கும்பாபிஷேக விழாவில் கையில் கலசம் தூக்கி வருவது இன்றைய வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ‘திராவிட மாடலை வீழ்த்தி, அக்காவும் தம்பியும் ஆன்மிக வழிக்கு வந்துவிட்டார்களா?’ என பாஜகவினர் இதை மெனக்கிட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள்.

என்.பெரியசாமி
என்.பெரியசாமி

இதற்கு விளக்கம் சொல்லும் கீதா ஜீவனின் ஆதரவாளர்களோ, “தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள போத்தி விநாயகர் கோயிலில் கீதா ஜீவனின் அப்பா என்.பெரியசாமி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தர்மகர்த்தாவாக இருந்திருக்கிறார். இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழாவில் பெரியசாமி இல்லாததால் அவரது வாரிசுகள் கலந்துகொண்டனர். திராவிட மாடலின் மையநோக்கம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. எந்த மதத்தினரையும் புண்படுத்தாமல் இருப்பதுதான்” என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in