
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியின் முன்வரிசையில் தமிழக அமைச்சர்கள் பலரும் அமர்ந்திருந்தனர். அமைச்சர் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு அருகில் அமைச்சர் எ.வ.வேலு அமர்ந்திருந்தார். காலையில் பட்டமளிப்பு விழா தொடங்கிய சிறிது நேரத்திலேயே அமைச்சர் எ.வ.வேலு கண்ணயர்ந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் நேரு ஆர்வமாக ஃபைலை புரட்டிக்கொண்டிருந்தபோது, எ.வ.வேலு தூங்கிவழிந்த நிகழ்வை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.