`அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள் ஜாலியாக இருக்கிறார்கள்’: சர்ச்சையைக் கிளப்பிய துரைமுருகன்!

`அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகள் ஜாலியாக இருக்கிறார்கள்’: சர்ச்சையைக் கிளப்பிய துரைமுருகன்!

``அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் ஜாலிகாக இருக்கிறார்கள்'' என அமைச்சர் துரைமுருகன் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார்.

வேலூர் மாவட்டம், மேல்மாடி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டு பேசினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அப்போது பேசிய அமைச்சர், “அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இங்கே பெரிய பெரிய தொழிற்சாலைகள் வருகின்றன. அவர்களுக்கெல்லாம் இலவச மின்சாரம் கொடுக்கிறோம். ஏன் விவசாயிகளுக்குக் கொடுக்கக் கூடாது என அன்றைக்குக் கலைஞர் கேள்வி எழுப்பினார். அதன் விளைவுதான் இங்கே உட்கார்ந்திருக்கிற அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் ஒரு பம்ப் செட் வைத்திருப்பவர்கள் ஜாலியாக இருக்கிறீர்கள். இல்லாவிட்டால் இன்றைக்கு அதுவும் போய்க்கொண்டிருக்கும்.

இந்த முறை எனக்கு நிறைய பணிகள் உள்ள நீர்வளத்துறைக் கொடுத்திருக்கிறார்கள். முதல்வர் யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவி என அறிவிப்பதற்கு முன்னால் என்னை அழைத்தார். அப்போது நீங்கள் எந்த துறையை எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கேட்டார். நீர்வளத்துறைத்தான் வேண்டும் என்று சொன்னேன். ஏன் என்று கேட்டார் முதல்வர். ‘விவசாயிகள் தொடர்புடையதால் எனக்கு அதுதான் விருப்பம். பத்து ஆண்டுகளாக இந்த இலாகா சீரழிந்து போய் கிடக்கிறது. அதைக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொன்னேன். அடுத்து கனிம வரித்துறையைக் கொடுத்துவிடுங்கள் என்றேன். அதில் மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in