இதெல்லாம் வேஸ்ட்; அப்செட்டில் துரைமுருகன்!

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

பிரதமர், மத்திய அமைச்சர் ஆகியோரை சந்திப்பது வெறும் சம்பிரதாயம் தான் எனவும், காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தமிழ்நாடு எம்பிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை சந்தித்து, காவிரியில் நீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முறையிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திப்பது வெறும் சம்பிரதாயம் தான் என தெரிவித்தார்.

இந்திய உச்ச நீதிமன்றத்திடம் மட்டுமே தமிழகத்திற்கு நீதி கிடைக்கப் போகிறது எனவும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறக்காதது தான் பிரச்சினை எனவும் தெரிவித்தார். தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் எவ்வாறு பங்கீடு செய்யலாம் என்பதற்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளதாக கூறிய அவர் இதை உச்சநீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.

தங்கள் பகுதியில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா கூறுவது குறித்து கேட்ட போது அவர்கள் தண்ணீர் இல்லை என்கிறார்கள், நான் தண்ணீர் இருக்கிறது என்று சொல்கிறேன். ஆனால் தீர்ப்பளிப்பது யார்? அதுதான் நீர் ஒழுங்குமுறை வாரியம் என குறிப்பிட்டார். ஆணையம் தண்ணீர் இருக்கிறது என்று சொன்னால் 12,500 கன அடி தண்ணீர் தரலாம் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in