அத்திக்கடவு - அவினாசி திட்டம் எப்போது தொடங்கப்படும்?- செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதில்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் காலிங்கராயன் அணையில் தண்ணீர் வந்த பிறகு இத்திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், ”கடந்த அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் 60 ஆண்டு கால விவசாயிகளின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 1,652 கோடி நிதி ஒதுக்கி, 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. எப்போது அந்த திட்டம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்றப்படும்” என கேள்வி எழுப்பினார்.

சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன்
சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன்

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ”அத்திக்கடவு -அவினாசி திட்டத்தை துவக்கும் அளவுக்கு எல்லா திட்டங்களும் முடிவடைந்துள்ளன. அந்த திட்டத்திற்கு காளிங்கராயன் அணையில் இருந்து 1.5 டிஎம்சி தண்ணீரை பம்ப் செய்து கொண்டு செல்ல வேண்டும். ஆனால் இப்போது தண்ணீர் இல்லை. ஆகையால் காளிங்கராயன் அணையில் தண்ணீர் வந்தவுடன் முதலமைச்சர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார்” என தெரிவித்தார்.

அத்திக்கடவு -அவினாசி திட்ட நீரேற்று நிலையம்
அத்திக்கடவு -அவினாசி திட்ட நீரேற்று நிலையம்

கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளின் 70 ஆண்டு கோரிக்கையான அவினாசி- அத்திக்கடவு திட்டம், சுமார் 80 சதவீத பணிகள் நிறைவடைந்தும் தண்ணீர் இல்லாத காரணத்தால் துவங்கப்படாமல் உள்ளது விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அத்திக்கடவு - அவினாசி திட்ட நீர்
அத்திக்கடவு - அவினாசி திட்ட நீர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in