மீண்டும் உடல்நலம் பாதிப்பு: மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

துரைமுருகன்
துரைமுருகன்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் அவர் இன்று பங்கேற்க இருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in