அரசியல் தலைவராகி கருத்து சொல்லுங்கள்; ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

ஆளுநர் ஆர்.என்.ரவி-துரைமுருகன்
ஆளுநர் ஆர்.என்.ரவி-துரைமுருகன்
Updated on
1 min read

பட்டியலின ஊராட்சி தலைவர் பதவியேற்பு விவகாரம் தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கு, குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

அரசியல் பேச வேண்டும் என்றால், ஆளுநர் அரசியல் தலைவராக மாறி தன் கருத்தை தாராளமாக தெரிவிக்கட்டும் என்றும், அதற்கு பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த தமிழக மக்களுமே தயாராக இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவினை படிக்காமல் பாஜக செய்தித் தொடர்பாளர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டமிட்டு தமிழ்நாடு அரசின் மீது அவதூறு பரப்புவதா என்று துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் சமூக நீதியை குலைக்கும் வகையில் பரப்புரை செய்வது அவருடைய பதவிக்கு அழகு அல்ல என்றும், நாயக்கனேரி ஊராட்சி பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மட்டுமே அங்கு பதவியேற்பு நடைபெறாமல் உள்ளது எனவும் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in