திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல்நலக்குறைவு: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுகவினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தான் திமுக அமைச்சரவையிலேயே மூத்தவர். வயதால் 80 கடந்துவிட்டாலும், இளைஞரைப் போல் சுறு,சுறுப்பாக ஓடிக்கொண்டே இருப்பார். எந்த பிரச்சினைக்கும் நகைச்சுவை கலந்து பேசும் இவரது நாவன்மையால் எதிர்க்கட்சியினர் கூட துரைமுருகன் பேச்சை ரசிப்பார்கள்.

இந்நிலையில் துரைமுருகனுக்கு இன்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆனால் சாதாரண உடல்வலி உள்ளிட்ட வயோதிகத்திற்கே உரிய சிறிய பிரச்சினைகளால் தான் துரைமுருகன் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாகவும், இன்று மாலையே அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைமுருகனின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் நலம் விசாரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in