பொதுமக்களுடன் தேவராட்டம் ஆடிய அமைச்சர், எம்பி: களைகட்டிய கோயில் திருவிழா

பொதுமக்களுடன் தேவராட்டம் ஆடிய அமைச்சர், எம்பி: களைகட்டிய கோயில் திருவிழா
நடனமாடிய அமைச்சர்

ஒட்டன்சத்திரம் அருகே கோயில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாக நடனம் ஆடினர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது பெயில் நாயக்கன்பட்டி. இங்குள்ள காளியம்மன் கோயில் வருடா வருடம் திருவிழா நடைபெறும். இக்கோயிலைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி திருவிழாவை சுமார் ஏழு தினங்களுக்கு சிறப்பாக நடத்துவது வழக்கம்.

கோயில் திருவிழாவில் மூன்றாவது தினமான நேற்று இரவு திடீரென உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, பொதுமக்கள் ஒன்றிணைந்து தேவராட்டம் ஆடிக்கொண்டிருந்த போது இவர்களும் இணைந்து உற்சாகமாக கோயில் முன்பு தேவராட்டம் ஆடியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in