அமைச்சர் எ.வ.வேலு பதவி விலக வேண்டும்- போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!

அமைச்சர் எ.வ.வேலு பதவி விலக வேண்டும்- போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!

திருவண்ணாமலையில் 6 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 23 சங்கங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் பங்கேற்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களில் 3200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கியது. விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து 126 நாட்கள் அமைதியான வழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய 20 விவசாயிகளையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில் 7 பேர் திடீரென குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. இதற்கு கண்டனங்கள் எழுந்தன. கடந்த 18ம் தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்கவுள்ள நிலையில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

செய்யாறு விவசாயிகள் போராட்டம்
செய்யாறு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் 24 மாவட்டங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அவர்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறிய திமுக அரசு தங்களை வஞ்சித்துவிட்டதாகவும், உணவளிக்கும் விவசாயிகள் மீதே குண்டாஸ் சட்டத்தைப் போடும் அளவிற்கு துணிவிட்டதாக குற்றம்சாட்டினார்கள்.

மேலும் திருவண்ணாமலையில் விவசாயிகள் மீது குண்டாஸ் போட காரணமாக இருந்த அமைச்சர் எ.வ.வேலு உடனே பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினர். இந்த போராட்டம் தொடரும் என்றும் வரும் 29ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in