தென்காசி எம்.பியால் தொல்லையில்லை; சில எம்.பியால் தொல்லையிலும் தொல்லை! - யாரைச் சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்?

தென்காசி எம்.பியால் தொல்லையில்லை; சில எம்.பியால் தொல்லையிலும் தொல்லை! - யாரைச் சொல்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்?

’’தென்காசி எம்.பி. தொல்லை இல்லாதவர், ஆனால் சில எம்.பி. தொல்லையிலும் தொல்லை’’ என தமிழக கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது தூத்துக்குடி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தென் தமிழகத்தில் நாளுக்கு நாள் கனிமொழியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னை அறியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்பதில் கனிமொழி உறுதியாக உள்ளார். அமைச்சர் கீதா ஜீவன் ஆதரவாளர்களுக்கும், அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களுக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

கனிமொழியின் ஆதரவு கீதாஜீவனுக்கு உள்ளதால் அனிதா ராதாகிருஷ்ணன் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தென்காசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், “கிராமப்புற பொருளாதாரத்தை பொருத்தவரை விவசாயத்துடன் சேர்ந்து கால்நடை வளர்ப்பு வாயிலாக கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. நாட்டுக்கோழி தட்டுப்பாட்டை போக்குகின்ற வகையில் நாட்டுக் கோழி பெருக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கிராமபுற மக்களே அதிகளவு பயன் அடைந்துள்ளனர்” என்றார்

மேலும் பேசிய அவர், தென்காசி மக்களவை உறுப்பினர் யாருக்கும் தொல்லை இல்லாத எம்.பி யாக இருந்து வருகிறார். தொல்லை உள்ளவர்கள் யாரேனும் பதவிக்கு வந்தால் தொல்லையாகதான் இருக்கும் என்று சூசகமாக கூறினார். அமைச்சரின் இந்த பேச்சு திமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in