மாணவர்களை வேறு வேலையில் ஈடுபடுத்தினால்..!- ஆசிரியர்களை எச்சரிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களை வேறு வேலையில் ஈடுபடுத்தினால்..!- ஆசிரியர்களை எச்சரிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்

"பள்ளியில் படிப்பை தவிர மாணவர்களை வேறு வேலையில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பாக மானோஜிபட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, மனிதநேயத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இந்த விழாவில் பேசிய அவர், ``முதலமைச்சர் தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் மாணவ- மாணவிகளுக்கான திட்டங்களை கொண்டு வருகிறார். அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொது தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். பள்ளியில் படிப்பை தவிர மாணவர்களை வேறு வேலையில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in