கச்சத்தீவு என்கிற பாஜகவின் அரசியல் வேஷம், தேர்தல் வேஷம் நமது பெரியார் மண்ணில் எடுபடாது என மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சுதாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாபநாசம் சட்டமன்ற தொகுதி, தஞ்சை ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவாய் பாளையம், அருள்மொழிபேட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தப்பாட்ட இசையுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து செல்ல வேட்பாளர் சுதா, அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்கு கேட்டு சென்றனர்.
பிரச்சாரத்திற்கு இடையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “கச்சத்தீவு விவகாரத்தை தற்போது விவாத பொருளாக பாஜகவினர் கொண்டு செல்ல பார்க்கிறார்கள். உண்மை என்ன என்று அவர்கள் பார்க்கவில்லை. தமிழ்நாடு மக்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவர் எதையும் விட்டுக் கொடுத்தது கிடையாது. பத்து வருடங்களாக ஆட்சி செய்கின்ற பாஜக கச்சத்தீவை மீட்டு கொண்டு வர வேண்டியது தானே? என்றார்.
மேலும், “பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மீனவர்கள் பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து வந்தது. இப்பொழுது மீனவர்கள் படகுகளை பறிமுதல் செய்வது மீனவர்களை தாக்குவது என பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. இலங்கை சென்ற போது இந்த பிரச்சனை குறித்து பேசி இருக்கலாமே? தேர்தல் வரும் போது மட்டும் தான் இந்த பிரச்சனைகள் எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரிகிறது. மக்களும் மீனவர்களும் இவர்களைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். இந்த அரசியல் வேஷம், தேர்தல் வேஷம், நமது பெரியார் மண்ணில் எடுபடாது” என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!
வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!