ஆருயிர் நண்பருக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து!

ஆருயிர் நண்பருக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து!

திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் உற்ற நண்பராக இருப்பவர் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. முதல்வர் ஸ்டாலினும், அன்பில் மகேஷின் தந்தையான அன்பில் பொய்யாமொழியும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தவர்கள். அந்தப் பழக்கத்தில் அவர்களுடைய மகன்கள் உதயநிதியும் அன்பில் மகேஷும் சிறு வயது முதலே நெருக்கமான நண்பர்களாகப் பழகி வருகின்றனர். அன்பில் மகேஷ் சட்டமன்ற உறுப்பினர் ஆனதற்கும்,  அமைச்சர் ஆனதற்கும் உதயநிதியின் நெருக்கம்தான் காரணம் என்று சொல்லப்படுவது உண்டு.

உதயநிதியை திமுக  இளைஞரணி செயலாளர் பொறுப்பிற்கு கொண்டு வருவதற்கு கடும் பிரயத்தனம்  செய்தவர் அன்பில் மகேஷ் தான்.  அதேபோல அவரை அமைச்சராக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் திமுகவினரை தயார்படுத்தும் அடுத்தகட்ட வேலைகளையும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான் தீவிரமாகச் செய்து வருகிறார். 

இந்த நிலையில் இன்று தனது 45-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலினுக்கு அன்பில் மகேஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ‘எனது ஆருயிர் நண்பரும்,  திமுக இளைஞரணிச் செயலாளருமான  உதயநிதிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்'  என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in