அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று மதியம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்றகொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இதனை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய அறிக்கையை தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதில், வயிற்றின் மேல்பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பில் மகேஷ் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in