தேர்தல் வரைக்கும் ஊர் பளபளன்னு இருக்கனும்... அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலகல பேச்சு!

அமைச்சர் தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தேர்தல் முடியும் வரை ஊர் பளபளவென இருக்க வேண்டுமென, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மக்களவைத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள்
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளரும் திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள்

கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், ”தமிழகத்தில் நம்மை தவிர பலமான கூட்டணி யாரும் கிடையாது. கூட்டணி பலமாக உள்ளது என யாரும் சும்மாவும் இருக்கக்கூடாது. உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளுங்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நமது ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் 100 நாள் வேலைக்கான பணத்தைத் தரவில்லை. அதைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்” என்றார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

மேலும், ’தேர்தல் வரை ஒழுங்காக குப்பை எடுக்க வேண்டும். இதை உள்ளாட்சி பிரதிநிதிகள் சரிவர கவனிக்க வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் முடியும் வரை ஊர் பளபளவென இருக்க வேண்டும். மின்விளக்குகள் சரி செய்யப்பட வேண்டும். குடிநீர் ஒழுங்காக வழங்க வேண்டும்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பெண்கள் சமையல் கட்டிற்கு உள்ளே சென்று வாக்குகள் சேகரிக்க வேண்டும். இந்த தேர்தல் திமுகவிற்கு சவாலான தேர்தல். வெள்ளத்திற்கு வராத மோடி பயந்து போய் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்” என பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...

‘சிங்கத்தின் கோட்டைக்குள்ள ஆடு சிக்கிடுச்சு... அண்ணாமலையை விமர்சிக்கும் கோவை அதிமுக!

வேறு வழி தெரியவில்லை... கடிதம் எழுதி விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!

அதிர்ச்சி... போலீஸ் தாக்கியதில் கால் டாக்சி ஓட்டுநர் உயிரிழப்பு?

டாக்டர் ராமதாஸூக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்... அதிர வைத்த பிரபல தயாரிப்பாளர்!

களத்தில் இறங்குகிறார் எஸ்.பி.வேலுமணி... செம குஷியில் கோவை, நீலகிரி அதிமுக வேட்பாளர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in