எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன்: கோவையில் பரபரப்பு போஸ்டர்

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன்: கோவையில் பரபரப்பு போஸ்டர்

கோவையில் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு கமல்ஹாசன் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவரது உருவச்சிலை மற்றும் புகைப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், எம்ஜிஆர் ரசிகர்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி 80-வது வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதில், ‘துணிவு’ அரசியல் செய்த எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு நம்மவர் கமல்ஹாசன்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், எம்ஜிஆர் உடன் கமல்ஹாசன் சிறுவயதில் நடித்த ‘ஆனந்த ஜோதி’ திரைப்படத்தின் புகைப்படமும், எம்.ஜி.ஆர் கமலஹாசனுக்கு விருது வழங்கிய புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்களால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in