சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; மர்ம நபர்கள் அட்டகாசம்: கொந்தளிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; மர்ம நபர்கள் அட்டகாசம்: கொந்தளிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டுள்ளதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை, தேனாம்பேட்டை, ஜி.என்.செட்டி சாலையிலுள்ளஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை சரி செய்யவும், இனி வருங்காலங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அனைத்திந்திய அண்ணா திமுக-வின் நிறுவன தலைவர், தமிழக மக்கள் இதயங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் நீங்கா புகழ் கொண்டிருக்கும், சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மக்களின் இதயக்கனி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், பொது அமைதியை சீர் குலைக்கவும் நினைக்கும் விஷமிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது மிக்கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in