இவ்வளவு பிரச்சினைகள் இருக்குங்க: முதல் ஆளாக கோரிக்கை பட்டியலை அளித்தார் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை பட்டியல் அளித்த இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை பட்டியல் அளித்த இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குள் இருக்கிற தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கிறார் அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.

தங்கள் தொகுதியில் இருக்கிற முக்கியமான பத்து பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அவற்றை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவை ஏற்று முதல் ஆளாக தனது திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள முக்கியமான தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகளை பட்டியலிட்டு ஆட்சியரிடம் அளித்திருக்கிறார் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.


திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமாரிடம் இன்று அவர் கொடுத்துள்ள அந்த பட்டியலில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வரும் வயதானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி தரிசிக்க ரோப் கார் வசதி, 24 மணிநேரமும் தங்குதடையற்ற குடிநீர், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகண்டு மக்கள் நடந்து செல்ல நடைபாதை, சிரமமான பகுதிகளில் சுரங்கப்பாதை கே. சாத்தனூர் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம், உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைப்பு டவுன்ஹால் சீரமைப்பு, வீட்டுமனை பட்டா போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்.

அவற்றை விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என்று ஆட்சியரை கேட்டுக் கொண்டுள்ள அவர் தமது தொகுதியின் முன்னேற்றத்திற்கான முக்கிய தேவைகளைத் தெரிவிக்க வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு தொகுதி மக்களின் சார்பாக இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in