சரத் பவார் கட்சியின் ஒற்றை எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்: மேகாலயாவில் 19 எம்எல்ஏ இடங்கள் காலி!

சரத் பவார் கட்சியின் ஒற்றை எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்: மேகாலயாவில் 19 எம்எல்ஏ இடங்கள் காலி!

மேகாலயா சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் சலேங் சங்மா அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் சேர்ந்த எம்எல்ஏ சலேங் சங்மா, மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள காம்பேக்ரே தொகுதியில் இருந்து 2018-ம் ஆண்டு மேகாலயா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸில் இணைந்தது குறித்துப் பேசிய சலேங் சங்மா, “ தற்போது காங்கிரஸில் இணைகிறேன். இது என்சிபியை விட இப்போது பெரிய மேடை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இது வாக்கு வங்கியைப் பற்றியது அல்ல. இது என்னையும், எனது மக்களையும் பற்றியது" என்று கூறினார். சலேங் சங்மா, 2018-ல், காம்பேக்ரே தொகுதியில் வெறும் 136 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதுவரை, 19 மேகாலயா எம்எல்ஏக்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்து, இரண்டு மாதங்களில் மற்றவர்களுடன் இணைந்துள்ளனர். இதன் காரணமாக சட்டசபையில் 19 இடங்கள் காலியாக உள்ளன. 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் வென்றது. ஆனால் தற்போது அக்கட்சிக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in