'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்': 3 நாட்களுக்கு மக்களவைத் தொகுதிகளில் திமுக தேர்தல் பொதுக்கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

'தமிழகத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் அனைத்து தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் மூன்று நாட்களுக்கு நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைமை அலுவலகம்
திமுக தலைமை அலுவலகம்

மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அதனைச் சந்திக்க திமுக பலமான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. பூத் கமிட்டி அளவிலும்கூட பணிகளைச் செய்து முடித்துள்ள திமுக, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அதேபோல தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்து எம்.பி கனிமொழி தலைமையிலான குழுவினர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பல்வேறு தரப்பட்டவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்கள். இது தவிர தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவும் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இப்படி அனைத்து வகையிலும் தேர்தல் முன்னேற்பாடுகளில் முன்னேறி வரும் திமுக தற்போது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது.

 திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பிப்ரவரி 16 முதல் 18-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 'தமிழகத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திமுக அரசின் சாதனை மற்றும் மத்திய அரசின் மோசமான செயல்பாடுகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். இந்த  பொதுக் கூட்டங்களில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in