வைகோவுக்கு சரமாரி கேள்வி: மதிமுகவில் விழும் அடுத்த விக்கெட்

வைகோவுக்கு சரமாரி கேள்வி: மதிமுகவில் விழும் அடுத்த விக்கெட்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு அக்கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் சரமாரியாக கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளார்.

மதிமுகவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்சிக்குள் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் வைகோவுக்கு மதிமுகவின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மதிமுகவில் கேள்வி கேட்கும் நபர்கள் துரோகி என்றால் கட்சிக்காக பணிகள் செய்தது யார் என்றும் தேர்தல் கூட்டணி போன்ற முக்கிய முடிவுகளை ஆட்சி மன்றக் குழுவை கூட்டி எடுக்காமல் வைகோ தன்னிச்சையாக எடுத்ததாகவும் விமர்சித்துள்ளார்.

கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் தேர்வில் துரை வைகோ தலையீடு இருந்ததாகவும், கட்சிப் பொறுப்பில் இல்லாத ஒருவர் வேட்பாளர் தேர்வில் எவ்வாறு ஈடுபட முடியும் என்றும் உழைக்கும் நிர்வாகிகளுக்கு மதிமுகவில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in