'வாத்தி கம்மிங்...' மேடையில் ஆட்டம் போட்ட தஞ்சை மேயர்... ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மக்கள் உற்சாகம்!

'வாத்தி கம்மிங்...' மேடையில் ஆட்டம் போட்ட தஞ்சை மேயர்... ஹேப்பி  ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் மக்கள் உற்சாகம்!
Updated on
1 min read

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற 'ஹேப்பி சன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் தஞ்சை மேயர் சண்.ராமநாதன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அவசரமான இந்த உலகில் நிற்க நேரமில்லாமல் மக்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். மக்களின் மன அழுத்தம் குறையவும், புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு,  சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் மாநகராட்சி சார்பாக ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் நடத்தி வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஹேப்பி ஸ்ட்ரீட்ஸ் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் கோர்ட் ரோடு ஆற்றுப்பாலம் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் மேயர் ராமநாதன்
நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் மேயர் ராமநாதன்

இந்த இந்நிகழ்ச்சியில் தப்பாட்டம், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. உற்சாகமூட்டும் கலகலப்பான நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.  இதில் தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வயது வரம்பு இல்லாமல் அனைவரும் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

தஞ்சை மேயர் சண்.ராமநாதனும் மேடையில் மற்றவர்களோடு இணைந்து டான்ஸ் ஆடி மகிழ்ந்தார். அவருடன் எராளமானவர்கள் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடினர். மேயர் உட்பட பலரும் மேடையில் நடனமாட, தஞ்சை மக்களும், இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் என பாடல்களுக்கு நடனம் ஆட,  தஞ்சை நகரமே இன்று உற்சாக வெள்ளத்தில் திளைத்தது. 

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in