ஆய்வுக்குச் சென்ற முதல்வர்: கான்வாய் வாகனத்தில் தொங்கியபடிச் சென்ற சென்னை மேயர் பிரியா!

ஆய்வுக்குச் சென்ற முதல்வர்: கான்வாய் வாகனத்தில் தொங்கியபடிச் சென்ற சென்னை மேயர் பிரியா!

மேன்டூஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்யச் சென்றபோது, அவருடன் சென்ற சென்னை மாநகர மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிச் சென்ற சம்பவம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

சென்னை காசிமேட்டில் மீன்பிடித் துறைமுகத்தில் மேன்டூஸ் புயலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட படகுகளைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று  ஆய்வு மேற்கொண்டு,  மீனவர்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் அமைச்சர் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதல்வரின் பாதுகாப்பு கான்வாய் வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. அந்த கான்வாயில் மேயர் பிரியா, ஆணையர் சுகன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியபடியே பயணித்தனர்.

அப்போது பலரும் செல்போனில் இதைப் பதிவு செய்ததால், மேயர் பிரியா முகத்தை ஒரு கையால் மூடியபடியே ஆபத்தான முறையில் பயணம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கௌரவமான பதவியில் இருக்கும் மேயர் பிரியா, ஐஏஎஸ் அதிகாரி போன்றவர்களே இப்படி நடந்து கொள்ளலாமா என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in