சந்தேகப்பட்ட புகார்தாரர்: செல்ஃபி புகைப்படத்தை அனுப்பி ஆச்சரியப்படுத்திய பெண் மேயர்!

சந்தேகப்பட்ட புகார்தாரர்: செல்ஃபி புகைப்படத்தை அனுப்பி ஆச்சரியப்படுத்திய பெண் மேயர்!

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரனின் செல்ஃபி புகைப்படம் தொடர்பான பதிவு இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண் வழங்கப்பட்டிருந்தது. அதில் புகார் கொடுத்தால் மேயரே வாட்ஸ் அப்பில் பதில் அளிப்பார். உங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு பிரச்சினை ஒன்று தொடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. புகாரைச் சொன்னவர் என்னிடம் குறுஞ்செய்தியில் பதில் சொல்லிக் கொண்டிருப்பது மேயர் தானோ? அல்லது மாநகராட்சி ஊழியர்களா? எனக் கேட்டார். உடனே, மேயர் ஆர்யா ராஜேந்திரன் செல்ஃபி எடுத்து பதில் மெசேஜாக அனுப்பினார். இதைப் பார்த்ததும், அந்த புகார்தாரர் மிகவும் ஆச்சரியத்தில் மூழ்கினார். இந்த உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து மேயர் ஆர்யா ராஜேந்திரன் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு வைரல் ஆகிவருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in