`இமாச்சலப் பிரதேச மக்களின் ஆசைகள் நிறைவேறட்டும்'- காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

`இமாச்சலப் பிரதேச மக்களின் ஆசைகள் நிறைவேறட்டும்'- காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி களமிறங்கினர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது. பாஜக 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் கட்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உறுதியான வெற்றியைப் பெற்றுள்ளனர். இமாச்சல பிரதேச மக்களின் ஆசைகள் நிறைவேறட்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in