திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவிற்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக விரும்பியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இரண்டு தொகுதிகளுக்கும் மேல் போட்டியிட்டால் மட்டுமே ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது. இதனால் பம்பரம் சின்னம் கிடைப்பதில் மதிமுகவிற்கு தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்த நிலையில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு, தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
இதையடுத்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் புதுக்கோட்டை பகுதியில் தீப்பெட்டி சின்னம் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த சின்னமாக இருந்தாலும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்வோம் என அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!
கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!
பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!
மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!