கனியாமூர் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

மாணவி ஸ்ரீமதி மரணத்தால் பெரும் பேசுபொருள் ஆன கனியாமூர் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசிற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்ம மரணம் அடைந்தார். இதுதொடர்பில் அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி காவலர்களின் விசாரணை துரிதமாக நடைபெறுவதை உறுதிசெய்திட வேண்டுகிறோம். கனியாமூர், சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும்.

இப்படி செய்வதால் மட்டுமே அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மன உளைச்சல் இன்றி கல்வியில் கவனம் செலுத்தமுடியும். மாணவர் நலனைக் கருத்தில் கொண்டு சிபிசிஜடி விசாரணையை விரைந்துமுடிக்க ஆவண செய்ய வேண்டும். மேலும் பள்ளியில் சேதமானவற்றை பள்ளி நிர்வாகமே புனரமைப்பு செய்ய மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வேண்டும். சிபிசிஐடி போலீஸார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய வேண்டும். இதேபோல் இவ்விவகாரத்தில் அப்பாவிகளைக் கைது செய்வது, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் கைவிட வேண்டும்.”எனக் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in