ஒருங்கிணைப்பாளர் பதவியும் போச்சா! ஐயோ..ஐயோ..!- மார்க்சிஸ்ட் அருணன் கிண்டல்

ஒருங்கிணைப்பாளர் பதவியும் போச்சா! ஐயோ..ஐயோ..!- மார்க்சிஸ்ட் அருணன் கிண்டல்

ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டது என்று கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கிண்டல் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி பேராசிரியர் அருணன், யும், ஓபிஎஸ்ஸையும் விட்டுவைக்கவில்லை.

ஓபிஎஸ் வெளியேறியது, அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியது உள்ளிட்ட களேபரத்துக்கு மத்தியில் பாதியிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் ஆதரவாளர் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், 1.1.2021ல் செய்யப்பட்ட சட்ட விதி திருத்தங்களுக்கு நேற்றைய பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டது என்றும் அதிமுகவில் இனி ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பதவியில் நீடிக்கின்றனர் என்றும் கூறினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி பேராசிரியர் அருணன், ``ஒருத்தர் கேட்கிறாரு: "ஒருங்கிணைப்பளர்கள் பதவி காலாவதி என்றால் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி திரும்ப வந்து விட்டதாகத்தானே அர்த்தம்?" சட்ட ஞானி சண்முகத்திற்கே கிடுக்கிப்பிடியா! "அதிமுகவில் அடிமட்டத் தொண்டனும் தலைவராகலாம்": சி வி சண்முகம். அப்படியா? ஜெயலலிதாவும் சசிகலாவும் அப்படி அடிமட்டத் தொண்டர்களாக இருந்து தலைவர்கள் ஆனவர்களா?

ஒருங்கிணைப்பாளர்கள் தேர்விற்கு பொதுக்குழுவின் அங்கீகாரம் பெறாமலேயே தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தார்களாம், இப்போது பொதுக்குழு அங்கீகாரம் தராததால் அந்த பதவிகள் காலாவதி என தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பார்களாம்! இவ்வளவு காலமாக அவர்களை ஒருங்கிணைப்பாளர்களாக நினைத்த ஆணையம் ஏமாளி! சோனமுத்தா, ஒருங்கிணைப்பாளர் பதவியும் போச்சா! ஐயோ..ஐயோ..!" என்று கிண்டல் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in