மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், கருணாநிதி, ஸ்டாலின்: அன்பில் மகேஷ் சொன்ன ஒரு தகவல்

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், கருணாநிதி, ஸ்டாலின்: அன்பில் மகேஷ் சொன்ன ஒரு தகவல்

மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் சொன்ன தகவல் ஒன்றை சட்டப்பேரவையில் தெரிவித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

தமிழக சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்றும் அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் திட்டம் என்றும் கூறினார்.

அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022-23-ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த அமைச்சர், கரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கவே இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் இந்தியாவின் முன்னோடி திட்டமாக இது செயல்படுகிறது என்றும் கூறினார்.

4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும் 6,029 அரசுப் பள்ளிகளில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் 2713 நடுநிலைப்பள்ளிகளில் ரூ210 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கிராமம் மற்றும் நகரப்புற பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று கூறிய அமைச்சர், சதுரங்க போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும் என்றும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ். சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார். ஒரே வகையான குவளையில் கொடுங்கள் என்றார் அம்பேத்கர். பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர். தேநீரை இலவசமாக கொடுங்கள் என்கிறார் ஸ்டாலின்" என்று தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in