அரசியலுக்கு முழுக்கு போட்ட மருது அழகுராஜ்!

அரசியலுக்கு முழுக்கு போட்ட மருது அழகுராஜ்!

நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மருது அழகுராஜ் அரசியலிலிருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அந்த பத்திரிகையை சசிகலா தரப்பினர் நிர்வாகம் செய்யத் தொடங்கினர். இந்நிலையில், அவர் கடுமையான விமர்சனங்களை சசிகலா மீது வைத்து வந்தார். இதன் காரணமாக நமது எம்ஜிஆர் நாளிதழில் இருந்து மருது அழகுராஜ் வெளியேற்றப்பட்டார்.

பின்னர், ஓபிஎஸ்- ஈபிஎஸ் வசம் அதிமுக சென்றதும் ‘நமது அம்மா’ என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இவருக்குப் போட்டியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதையடுத்து நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்திருந்தார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் தற்போது அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், “ எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுகாலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in