திருச்சி பயனாளி வீட்டின் மேப்பிங் லக்னோவில் காட்டுகிறது: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்!

அமைச்சர் அன்பில் மகேஷ்.
அமைச்சர் அன்பில் மகேஷ்.திருச்சி பயனாளி வீட்டின் மேப்பிங் லக்னோவில் காட்டுகிறது: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட அமைச்சர்!
Updated on
1 min read

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகளை, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கி மோசடி செய்துள்ளனர். தேவையற்ற செலவுகளையே அதிமுக அரசு செய்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவாக காட்டியுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்த சிஏஜி அறிக்கை குறித்து தமிழ்நாடு அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’ மே 7-ம் தேதி போட்டித் தேர்வுகள் நடைபெறுவதால் மே 5-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு மே 8-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளோம்.

ஒவ்வொரு துறைச் சார்ந்த சிஏஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் 3% அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி சென்றுள்ளார்கள் என்பதைச் சிஏஜி அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

2016 முதல் 2021-ம் ஆண்டு வரைக்கு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட தகுதியான பழங்குடியினர்களுக்கான வீடு கட்டும் திட்டம் உரியவர்கள் பயன்பெறவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முறையாக இவர்கள் செயல்படுத்தாததால் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய 1,016 ஆயிரம் கோடி ரூபாய் வரவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிலும் திருச்சி பயனாளியின் மேப்பிங் லக்னோவில் காட்டுகிறது. கடலூர் பயனாளியின் வீட்டின் மேப்பிங் மேற்கு வங்காளத்தைக் காட்டுகிறது. இந்தத் திட்டத்தை மிகவும் அலட்சியமாக முறைகேடாகச் செயல்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

கடந்த 2016-ம் அண்டு முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகளைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளோம். அதிமுக ஆட்சியில் 1.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை. ஒரு ஆட்சி எப்படி நடைபெறக்கூடாது என்பதற்கு 2016 - 2021 சிஏஜி அறிக்கையே உதாரணம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in