பல பாஜகவினர் எங்களை ரகசியமாக ஆதரிக்கிறார்கள்: அதிர்ச்சியைக் கிளப்பும் அர்விந்த் கேஜ்ரிவால்

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

குஜராத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ரகசியமாக ஆதரவளித்து, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் சொந்தக் கட்சியின் தோல்வியைப் பார்க்க விரும்புகிறார்கள் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடன் வருகை தந்தார். குஜராத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் வல்சாத் மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய கேஜ்ரிவால், " குஜராத் முழுவதும் மாற்றத்தின் காற்று வீசுகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் நம்பிக்கையை விரும்புகிறார்கள், ஏனென்றால் இந்த ஆண்டுகளில் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை

பல பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்னை சந்தித்து ஆளும் கட்சியை தோற்கடிக்க ஏதாவது செய்யுமாறு ரகசியமாக என்னிடம் கேட்கிறார்கள். தங்கள் கட்சியை தோற்கடிக்க விரும்பும் அனைத்து பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு ரகசியமாக உழைக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் கூற விரும்புகிறேன்" என தெரிவித்தார்

1998ம் ஆண்டு முதல் குஜராத்தில் பாஜக தொடர்ச்சியாக ஆட்சியில் உள்ளது. இந்த முறையும் வெற்றிபெற வேண்டும் என பாஜக முனைப்புடன் உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவுக்கு கடும் நெருக்கடி அளித்து வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in